ஆன்லைனில் பொருட்களை வாங்கி ஏமாற வேண்டாம் நீலகிரி வணிக நிறுவனங்கள் எச்சரிக்கை ஊட்டி நவ 04 டிஜிட்டல் காலம் என்ற மாயைக்குள் பொதுமக்கள்
ஆன்லைனில் பொருட்களை வாங்கி ஏமாற வேண்டாம் நீலகிரி வணிக நிறுவனங்கள் எச்சரிக்கை ஊட்டி நவ 04 டிஜிட்டல் காலம் என்ற மாயைக்குள் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி ஏமாற வேண்டாம் என வர்த்தக நிறுவனங்கள் வியாபாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர் தரமான பொருட்கள் குறைவான விலை வீட்டுக்கே பொருட்களை அனுப்புகிறோம் என்ற போலியான விளம்பரங்கள் கவர்ச்சியான திட்டங்களால் படித்தவர் முதல் பாமரர் வரை அடிமையாகி உள்ளனர். உணவுப் பொருட்கள் முதல் உயிர்காக்கும் மருந்து பொருட்கள் வரை ஆன்லைனில் வாங்கி பல்வேறு பிரச்சனைகளை அன்றாட மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் நாம் வீட்டில் பயன்படுத்தும் டிவி பிரிட்ஜ் எலக்ட்ரானிக் பொருட்கள் தரமற்று இருப்பதால் அதன் பயன்பாடு 6 மாதம் கூட நிலைப்பதில்லை ஒரு பிரபல நிறுவனம் சமீபத்தில் நம் உயிருக்கு தேவையான o பாசிட்டிவ் பி குரூப் ரத்த வகை உயிர்காக்க உடனடி தேவைக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்ற அறிவிப்பை பார்த்து பலர் அதிர்ச்சி ஆகினார் ஆன்லைன் மோசடிகள் என்பது இணையம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி பணம் மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளை திருடும் ஒரு வழிமுறையாகும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கி அதிகமாக ஏமாறுவது பெண்கள்தான் என சமீப ஆய்வு தெரிவிக்கிறது பெரும்பான்மையான மக்கள் அதிகமான மின்னணு பொருட்கள் செல்போன் போன்றவைகளை வாங்கி ஏமாறுகிறார்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதால் உள்ளூர் வியாபாரிகள் இயற்கை தானிய உற்பத்தியாளர்கள் தரமான பொருட்களை வருடாந்திர உத்திரவாதத்துடன் விற்பனை செய்யும் மின்னணு எலக்ட்ரானிக் விற்பனையாளர்கள் சாதாரண தையல் தொழிலாளர்கள் நடைபாதை வியாபாரிகள் பாத்திரம் துணிகள் உடைகள் ஜவுளி பொருட்கள் விற்பனையாளர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர் எனவே பொதுமக்கள் ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தை கைவிட்டு ஏமாற்றம் அடையாமல் உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்குமாறு நீலகிரி மாவட்ட வர்த்தக அமைப்புகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர் ஆன்லைன் மோசடியில் பாதிக்கப்பட்டால் தேசிய சைபர் கிரைம் 1930 என்னில் உடனடியாக புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ளனர் மேலும் நாம் உடல் சார்ந்த மருந்து பொருட்கள் உணவு பொருட்கள் ஆகியவற்றை ஆன்லைன் வர்த்தகத்தில் பெறுவது நம் உயிருக்கே உலை வைக்கும் செயலாகும் மேலும் பண்டிகை காலங்களில் எண்ணை மற்றும் ஆயத்த ஆடைகள் எலக்ட்ரானிக் பொருட்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் ஆன்லைனில் வாங்கி ஏமாற வேண்டாம் எனவும் தெரிவிப்பதோடு தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பட்டாசு மற்றும் பரிசு பொருட்களை எல்லாம் ஆன்லைனில் வாங்கி உபயோகப்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்கள் வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்