நீலகிரியில் தீபாவளிக்கான இனிப்பு கார வகைகள் விற்பனை குறைவு தயாரிப்பாளர்கள் கவலை
நீலகிரியில் தீபாவளிக்கான இனிப்பு கார வகைகள் விற்பனை குறைவு தயாரிப்பாளர்கள் கவலை ஊட்டி நவ. 05 தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் நீலகிரி மாவட்ட பேக்கரி கடைகளில் இனிப்பு கார வகைகள் விற்பனை அதிகரிக்கும் வடகிழக்கு பருவமழை தாக்கத்தினால் வியாபாரம் மந்தமாகவே நடக்கிறது சர்க்கரை மாவுப்பொருட்களின் விலை உயர்வால் உணவுப்பொருட்கள் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் சுற்றுலா வாசிகளின் வருகை வழக்கம்போல் அதிகரித்து இருந்தாலும் ஊட்டியில் வாகன போக்குவரத்து நெரிசலால் கடைகளில் எவ்வித பொருட்களும் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது தங்கும் விடுதிகளில் கட்டணம் இருமடங்காக உயர்ந்துள்ளது ஊட்டி வர்க்கி ஊட்டி சாக்லேட் டீத்தூள் ஸ்பைசிஸ் வாசனை திரவியங்கள் விற்பனை குறைவாகவே உள்ளது சமீபத்தில் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை நிலசரிவால் ஒரு வார காலமாகியும் சீரமைக்கப்படாததால் கோத்தகிரி வழியாக அனைத்து கனரக வாகனம் முதல் சிறிய வாகனங்கள் வரை திருப்பி விடப்பட்டுள்ளது நீலகிரி மாவட்டத்தில் நெய் வர்க்கி அனைவராலும் விரும்பி வாங்கி செல்லும் தின்பண்டமாகவும் சுற்றுலா வரும் பயணிகள் எப்போதும் கோத்தகிரியில் வர்க்கி டீத்தூள் பிஸ்கட் ஸ்டாபெரி பழம் ஆகியவற்றை வாங்கி செல்வார்கள் தொடர் வாகன நெருக்கத்தால் வாகனங்களை நிறுத்தி பயணிகள் எந்த பொருளும் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது இதனால் கோத்தகிரியில் தயாரிக்கப்படும் நெய் வர்க்கி போன்றவை விற்பனை மந்தமாகியுள்ளது தொடர் மழை சுற்றுலா பயணிகள் வருகை குறைவு இருமடங்கான விலைவாசி உயர்வுகளால் கோத்தகிரியில் பேக்கரி தின்பண்டங்கள் தயாரான நிலையில் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால் இனிப்பு காரவகை தின்பண்டங்கள் விற்பனையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்