Loading...

எஸ்.பி.பட்டினம் அருகே 19.8 கிலோ ஹஷீஷ் போதை பொருள் பறிமுதல்:

A

Admin

November 04, 2026 • 06:17 AM

எஸ்.பி.பட்டினம் அருகே 19.8 கிலோ ஹஷீஷ் போதை பொருள் பறிமுதல்:

எஸ்.பி.பட்டினம் அருகே 19.8 கிலோ ஹஷீஷ் போதை பொருள் பறிமுதல்: தொடர் குற்றவாளி கைது - காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை ராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம், எஸ்.பி.பட்டினம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 19.8 கிலோ கிராம் ஹஷீஷ் (Hashish) போதைப்பொருளைப் பறிமுதல் செய்து, தலைமறைவாக இருந்த முக்கியப் போதைப்பொருள் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 03.11.2026 ல்பிற்பகல் சுமார் 12:50 மணியளவில், பாசிப்பட்டினம் பாசியம்மன் கோவில் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக எஸ்.பி.பட்டினம் காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜன் அவர்களுக்கு கிடைத்த இரகசியதகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து சோதனை செய்தபோது, அவரிடமிருந்து 2 கிலோ கிராம் ஹஷீஷ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்ந்து அந்த நபரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், அவரது வீட்டிலிருந்து மேலும் 17.8 கிலோ கிராம் ஹஷீஷ் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சோதனையில் மொத்தமாக 19.8 கிலோ கிராம் ஹஷீஷ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றி போதைப்பொருளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், குற்றவாளி மனோவைக் கைது செய்து எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் G.சந்தீஷ் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்

- Advertisement -