சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்:
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்: முதுநாள் கிராமத்தில் தேசிய ஒருமைப்பாட்டு விழா! ராமநாதபுரம் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு, இராமநாதபுரம் அருகிலுள்ள முதுநாள் கிராமத்தில் தேசிய ஒருமைப்பாட்டு தின விழா நடைபெற்றது. இவ்விழா இராமநாதபுரம் மாவட்ட உதவிக் காவல் கண்காணிப்பாளர் செல்வி கா. நேஹா தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.மேலும், கமுதி நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர். அவர்கள் தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும், சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் வாழ்க்கை மற்றும் நாட்டின் ஒற்றுமைக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து, தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு விழாவில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.