Loading...

அரசு பள்ளியில் மூலிகைத் தோட்டம் அமைப்பு மாணவர்களுக்கு மூலிகை தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

A

Admin

September 25, 2026 • 12:56 PM

அரசு பள்ளியில் மூலிகைத் தோட்டம் அமைப்பு மாணவர்களுக்கு மூலிகை தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

அரசு பள்ளியில் மூலிகைத் தோட்டம் அமைப்பு
மாணவர்களுக்கு மூலிகை தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

தருமபுரி செப் 26
தருமபுரி அடுத்த கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு இயற்கை வளங்கள் மற்றும் மூலிகைத் தாவரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி 

நடைபெற்றது.

தருமபுரி வட்டாட்சியர் சுகுமார், தான் பணிபுரியும் இடங்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள சுற்றுப்புறப் பகுதிகளில் தொடர்ந்து மரக்கன்றுகள், மூலிகைச் செடிகள் மற்றும் அரிய வகை தாவரங்களை நட்டு, இயற்கை வளங்களை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மூலிகைத் தோட்டம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தவச்சிக்கீரை, மஞ்சள் கரிசாலை, சிறுகுறிஞ்சான், பெற்றத்தை, நிலக்கழ்வாலை, பாம்புகளா, சிறுகள்ளி, ஆரொருட், பூனை மிசை, முயல் காதில்லை, நீல நொச்சி, சங்கங்குப்பி, உருளைப் பிரண்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைச் செடிகள் நடப்பட்டன.
மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணியை மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, மூலிகைச் செடிகளை நட்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசிகாமணி, ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மூலிகைச் செடிகளை நட்டு பராமரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

பள்ளி வளாகத்திலேயே பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்களை வளர்ப்பதன் மூலம், மாணவர்கள் அவற்றின் பயன்பாடுகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -