ஊட்டசத்து பெட்டகம் மற்றும் வழிகாட்டி கையேடுகளை வழங்கிய மாவட்ட கலெக்டர் ரேவதி
ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து தாய்ப்பால் சேகரிக்கும் கருவி, ஊட்டசத்து பெட்டகம் மற்றும் வழிகாட்டி கையேடுகளை வழங்கிய மாவட்ட கலெக்டர் ரேவதி
தஞ்சாவூர் செப்டம்பர் 27
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி காவிரி படுகை, காரைக்கால் சார்பில் சமூகப் பொறுப்புணர்வு சிஎஸ்ஆர் நிதியின் கீழ் தாய்மார்கள் மற்றும் மாணவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்
அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில்
வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையேற்று துவங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் பேசுகையில்
ரூபாய் 2 லட்சம் மதிப்பில் 75 தாய்மார்களுக்கு கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய பொருட்கள், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் கள் அடங்கிய நலத்திட்ட உதவி பைகளையும், தாய்ப்பால் சேகரிப்பு மற்றும் தாய்ப்பால் ஊட்டும் நடை முறைகளை ஊக்குவிக்கும் வகையில் தாய்மார்கள் இடமிருந்து தாய்ப்பாலை சேகரித்து பாதுகாப்பாக வழங்குவதற்கு உதவும் வகையில் ரூபாய் 11 லட்சம் மதிப்பில் 4 எண்ணிக்கையிலான ப்ரெஸ்ட் பம்ப் உபகரணங்களை அரசு ராசா மிராசுதாரர் மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளுக்கான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கில் 124 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும், 104 அரசு மேல் நிலைப்பள்ளி சேர்ந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் 36 ஆயிரம் எண்ணிக்கையிலான சிறப்பு வழிகாட்டி கையேடுகளை வெளியிடப் பட்டுள்ளது
மேலும்
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியின் மூலம் பொதுமக்கள், தாய்மார்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும். இது போன்ற சமூக நலப் பணிகள் பாராட்டத்தக்கவை எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் மணிமேகலா, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி மேலாளர் தங்கமணி, மற்றும் ஓஎன்ஜிசி நிறுவன பொறியாளர்கள் சச்சின் தேவ் , சவுரப்ஜா ,கனகராஜ் உட்பட தாய்மார்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.