எடப்பாடி நகராட்சி , ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், ஆய்வு
எடப்பாடி நகராட்சி , ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும்
வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், ஆய்வு
சேலம் அக் : 3
எடப்பாடி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும்
வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், ஆய்வு மேற்கொண்டார்கள்.
எடப்பாடி நகராட்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தின் கட்டுமானப்பணி குறித்தும், எடப்பாடி ஊராட்சி ஒன்றியம், செட்டிமாங்குறிச்சி ஊராட்சி, அம்மன்கோவில் பகுதி விளையாட்டு மைதானத்தில் ரூ.9.90 இலட்சம் மதிப்பில் பொது சுகாதார மையம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும்,
இருப்பாளி ஊராட்சி, மூலக்கடை பகுதியில் வி பி ஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் ரூ.9.70 இலட்சம் மதிப்பில் பொது பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டு வரும் பணியினையும் நேரில் பார்வையிட்டு அதே பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவில் கொய்யா, நெல்லி, வேம்பு, வாகை உள்ளிட்ட வகையிலான சுமார் 30,700 செடிகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டார்கள்.தொடர்ந்து, பக்கநாடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவு தயாரிக்க பயன்படும் பொருட்களின் தரம், குழந்தைகளின் எடை, உயரம் சரியாக உள்ளதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்கள்.
அதே போன்று, பக்கநாடு நியாயவிலைக்கடையில் பொது விநியோக பொருட்களின் இருப்பு, தரம், எடை, விற்பனை விபரம், பயன்பெறும் மொத்த குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கை, பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நியாயவிலைப் பொருட்கள் அனைத்தும் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டறிந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, பக்கநாடு சக்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு உரம் இருப்பு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்கள். பின்னர், பக்கநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு கர்ப்பிணித்தாய்மார்கள் சிகிச்சை விபரம், குழந்தைகள் பிறப்பு பதிவேடு, மருத்துவப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்கள்.
எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், குடிநீர் தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துப் பணியாற்றிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் .இளம்பகவத், அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வுகளின்போது, எடப்பாடி வட்டாட்சியர் .ஜெயகுமார் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.