ஐக்கிய நாடுகள் சபையின் 63வது மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க தில்லி உச்ச நீதிமன்ற தமிழ் வழக்கறிஞர்கள் தேர்வு
ஐக்கிய நாடுகள் சபையின் 63வது மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க தில்லி உச்ச நீதிமன்ற தமிழ் வழக்கறிஞர்கள் தேர்வு.
டெல்லி அக் 03
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் கடைசி கூட்டதில் 6 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை
இரண்டு தமிழ் வழக்கறிஞர்கள் பங்கேற்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
தில்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ராம் சங்கர் ராஜா மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்து கணேச பாண்டியன் ஆகியோர் ஜெனிவாவில் நடைபெறும் 63 வது மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்று
நெதர்லாந்து நாட்டில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. 2015 ஆண்டு முதல் சர்வ தேச நீதிமன்ற விசாரணைகள் குறித்த ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்ட தொடர்களில் பங்கேற்று பணியாற்றி வரும் நிலையில் இந்த ஆண்டு நடைபெறும்
63 வது மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க தங்களது நெதர்லாந்து அமைப்பின சார்பில் பங்கேற்க இரண்டு தமிழ் வழக்கறிஞர்களை தேர்வு செய்து உள்ளது.
மேற்படி கூட்டத்தொடர் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்து தமிழ் வழக்கறிஞர்கள் ராம் சங்கர்ராஜா மற்றும் முத்து கணேசபாண்டியன் ஆகியோர்கள் 6/10 முதல் 9/10 வரை பங்கேற்க உள்ளனர்.
இந்த இரண்டு தமிழ் வழக்கறிஞர்கள் இலங்கையில் நடைபெற்ற இன படுகொலை, போர் குற்றங்கள், பாலியல் கொடுமைகள், பல்வேறு சித்திரைவதைகள் மற்றும் தற்போது செம்மணி மற்றும் தமிழர் பகுதிகளில் தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள், மனித புதைகுழிகள் இருந்து வருவதும் குறித்தும் பேச உள்ளனர்.
சர்வதேச விசாரணை, நீதிக்கான கோரிக்கை, போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் சட்டங்களின் படி தண்டித்தல் ஆகியன குறித்து ஆதாரத்துடன் சமர்ப்பிக்க உள்ளனர்.
மேலும்
ஏற்கனவே 1,60,000- இன்படுகொலையால் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் 18000 த்திற்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும் விசாரணை அறிக்கைகள் கூறுகின்றன.
மனித புதைகுழிகள் இனபடுகொலைகள் செய்த இலங்கை ராணுவ அதிகாரிகள் மற்றும் அதிகார தலைவர்களை இலங்கை உள்நாட்டு சட்டத்தின் படி தண்டிப்பது என்பது நடக்காத ஒன்று எனவே சர்வதேச நீதி விசாரணை மட்டுமே வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளனர்.
இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் இலங்கைக்கு எதிராக வாக்கு அளிக்க வேண்டும், நீதி நிலை நிறுத்த பட வேண்டும், மனித உரிமை மீறல்கள் செய்த அனைவரும் சட்டத்தின் படி தண்டிக்க பட வேண்டும் என்று வலியுறுத்தி பேச உள்ளனர்.
இலங்கை தமிழர்களின் நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தில்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயல்பாடுகளை மூத்த தமிழ் வழக்கறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் பாராட்டி வருகின்றனர்.