Loading...

கலசலிங்கம் பல்கலையில் பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் பயிற்சி

A

Admin

October 18, 2026 • 02:04 PM

கலசலிங்கம் பல்கலையில் பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் பயிற்சி

கலசலிங்கம் பல்கலையில்
பள்ளி
ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூர்:அக்:19

வத்திராயிருப்பு ஒன்றிய தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1,ம் வகுப்பு முதல் 3 , ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவ "புதிய பாடநூல்கள் "குறித்த இரண்டுஷ நாள் பயிற்சி ஸ்ரீவில்லிபுத்தூர்
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் விஜயலட்சுமி, அரவிந்தன் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பயிற்சியில் 113 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ஆசிரியர் கையேட்டைப் பயன்படுத்தும் விதம் குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டன.. பயிற்சி ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அலுவலர் அரவிந்தன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு கணேஷ்வரி சிறப்பாக செய்திருந்தார்.
பயிற்சி கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜா,செல்வி, உமா மகேஸ்வரி ஆகியோர்ஞ செயல்பட்டனர்.
பயிற்சியை சிவகாசி கல்வி மாவட்ட அலுவலர் செந்தில்குமார் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.

- Advertisement -