Loading...

காணாமல்‌ போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த மதுரை மாநகர காவல்துறையினர்.

A

Admin

October 13, 2026 • 03:01 PM

காணாமல்‌ போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த மதுரை மாநகர காவல்துறையினர்.

காணாமல்‌ போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த மதுரை மாநகர காவல்துறையினர்.


மதுரை அக் :13


மதுரை மாநகர காவல்‌ எல்கைக்குட்பட்ட தெப்பக்குளம் பகுதிகளில்,‌ கடந்த நான்கு மாதங்களில் காணாமல்‌ போன/ தவறவிடப்பட்ட சுமார்‌ 2.10 இலட்சம் ரூபாய்‌ மதிப்புள்ள 14 விலையுயர்ந்த செல்போன்கள், மதுரை மாநகர தெப்பக்குளம் சரக காவல்துறையினர் மற்றும் மாநகர சைபர்‌ கிரைம்‌ போலீசாரின்‌ உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட செல்போன்களை மதுரை மாநகர காவல் ஆணையர் இராஜேந்திரன் உத்தரவின் பெயரில் ‌ அதன்‌ உரிமையாளர்களிடம்‌ தெப்பக்குளம் காவல் நிலையத்தில்,‌ தெப்பக்குளம் குற்றப்பிரிவு ஆய்வாளர் வேதவள்ளி முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் காவல்துறையினர்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

- Advertisement -