கீழக்கரையில் தனியார் இடங்களில் திடீர் கடைகள் அமைத்து அரசின் அனுமதி இல்லாமல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கீழக்கரை வர்த்தக சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
கீழக்கரையில் தனியார் இடங்களில் திடீர் கடைகள் அமைத்து அரசின் அனுமதி இல்லாமல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கீழக்கரை வர்த்தக சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வர்த்தக சங்க தலைவர் முகமது ஹசன் செயலாளர் பாண்டியன் துணைச் செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள்உறுப்பினர்கள் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. சிவகுரு பிரபாகரனை
நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளனர் அதில் கீழக்கரை பகுதியில் சிறு குரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவிற்கு தனியார் இடங்களில் அரசின் அனுமதி இல்லாமல் திடீர் கடைகள் மற்றும் எக்ஸ்போ என்ற பெயரில் நடத்துகிறார்கள் இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது
அதனை நிறுத்த வேண்டும் எனவும் கீழக்கரை பகுதியில் தீயணைப்பு நிலையம் மற்றும் மீட்பு குழு அமைத்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்
கோரிக்கைகளை பரிசிலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாக தெரிவித்தனர்