Loading...

குரு மருத்துவமனையில் ரோபோடிக் உதவியுடன் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை

A

Admin

September 30, 2026 • 02:35 PM

குரு மருத்துவமனையில் ரோபோடிக் உதவியுடன் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை

குரு மருத்துவமனையில் ரோபோடிக் உதவியுடன் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை

மதுரை:அக்1

மதுரை குரு மருத்துவமனையில், தென்தமிழகத்தில் ரோபோடிக் உதவியுடன் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கமான இதய பைபாஸ் அறுவை சிகிச்சையில், நெஞ்சின் நடுப்பகுதியில் உள்ள எலும்பை திறந்து, மார்புப் பகுதியில் உள்ள இடது உள் மார்பகத் தமனி எனப்படும் ரத்தநாளத்தை பிரித்து தயார் செய்து, அடைப்பு ஏற்பட்டுள்ள இதய ரத்தநாளத்திற்கு மாற்றுப்பாதை ஏற்படுத்தப்படுகிறது. தேவைக்கேற்ப காலில் உள்ள ரத்தநாளமும் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

நெஞ்சு எலும்பைத் திறக்காமல் ரோபோடிக் உதவியுடன் ரத்தநாளத்தை பிரித்து தயார் செய்வது நவீன ரோபோடிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சாத்தியமாகியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளில் நெஞ்சு எலும்பை முழுமையாகத் திறக்காமல் ரத்தநாளத்தை மிகத் துல்லியமாக தயார் செய்ய முடிகிறது.

ரோபோடிக் கருவிகள் சிறிய துளைகள் வழியாக மார்புப் பகுதிக்குள் செலுத்தப்பட்டு, உயர் தெளிவுத்திறன் கொண்ட 3D பார்வையின் உதவியுடன் ரத்தக்குழாய் தயார் செய்யப்படுகிறது. பின்னர் இடது மார்புப் பகுதியில் சிறிய அறுவைத் திறப்பு மூலம் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அணுகுமுறை குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று அல்லது இரண்டு இதய ரத்தநாள அடைப்புகள் உள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படலாம். எந்த நோயாளிக்கு இந்த முறை பொருத்தமானது என்பது இதய அறுவை சிகிச்சை நிபுணரின் விரிவான பரிசோதனைக்குப் பின்னரே முடிவு செய்யப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த 40 வயது நோயாளிக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை

குரு மருத்துவமனைக்கு சமீபத்தில் சிகிச்சைக்காக வந்த 40 வயது ஆண் நோயாளிக்கு, இதய ரத்தநாள அடைப்பு கண்டறியப்பட்டு பைபாஸ் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது.

அவருக்கு மெட்பாட் அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை அமைப்பின் உதவியுடன் ஐ.எம்.ஏ.,ரத்தக்குழாய் துல்லியமாக தயார் செய்யப்பட்டு, பின்னர் சிறிய மார்பு அறுவைத் திறப்பு வழியாக பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.


14.09.2026 அன்று மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இதன் மூலம் ரோபோடிக் உதவியுடன் ரத்தக்குழாய் அறுவடை செய்து இதய பைபாஸ் அறுவை சிகிச்சை தென்தமிழகத்தில் குரு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மெட்பாட் ரோபோடிக் அறுவை சிகிச்சை அமைப்ப-ஐ பயன்படுத்தி ஐ.எம்.ஏ., ரத்தக்குழாய் ரோபோடிக் முறையில் தயார் செய்யப்பட்டது இந்தியாவிலேயே முதன்முறை என குரு மருத்துவமனை தெரிவித்துள்ளது."

'இதய அறுவை சிகிச்சையில் ரோபோடிக் தொழில்நுட்பத்தின் புதிய தொடக்கம்'

இதுகுறித்து குரு மருத்துவமனையின் மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில்:

இதய அறுவை சிகிச்சையில் ரோபோடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் எங்களது பயணத்தின் முதல் கட்டமாக, உ.எம்.ஏ., ரத்தநாளத்தை ரோபோடிக் உதவியுடன் வெற்றிகரமாக பிரித்து தயார் செய்துள்ளோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளில் நெஞ்சு எலும்பை முழுமையாகத் திறப்பதைத் தவிர்த்து, சிறிய அறுவைத் திறப்புகள் மூலம் சிகிச்சை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இந்த தொழில்நுட்பம் வழங்குகிறது.

இதனைத் தொடர்ந்து, படிப்படியாக இதய வால்வு அறுவை சிகிச்சைகள் மற்றும் இதய ஓட்டை அடைப்பு அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இதய அறுவை சிகிச்சைகளிலும் நுரையீரல் மற்றும் மார்புகூட்டு கட்டிகள் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கும் ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

நெஞ்சு எலும்பை முழுமையாகத் திறக்காமல் இதய பைபாஸ் - தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு நவீன ரோபோடிக் அணுகுமுறை.

அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்களை தென்தமிழக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மெட்பாட் ரோபோடிக் அறுவை சிகிச்சை அமைப்பு குரு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

- Advertisement -