கூடலூர் வனக்கோட்டத்தில் பிடிபட்ட புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்க்கு கொண்டு வரப்பட்டன.
கூடலூர் வனக்கோட்டத்தில் பிடிபட்ட புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்க்கு கொண்டு வரப்பட்டன.
சென்னை அக் :24
13 வயதுடைய ஆண் புலி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது கூடலூர் வனக்கோட்டத்தில் பிடிக்கப்பட்டு, சுமார் 13 வயதுடைய ஆண் புலி வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புலியின் உடல்நிலை மற்றும் மருத்துவத் தேவைகளின் அடிப்படையில், மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் அதற்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை மற்றும் தொடர் பராமரிப்பு வழங்கப்படும். மேலும், பூங்காவின் விலங்கு பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் புலியின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, அதன் ஆரோக்கியம் மற்றும் நலனை உறுதி செய்வதற்குத் தேவையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.