சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை - மாநில போட்டிக்கு தகுதி
சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை - மாநில போட்டிக்கு தகுதி
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் நடைபெற்ற வாலிபால், கடற்கரை கையுந்து பந்து (Beach vollay ball) மற்றும் தடகள போட்டிகளில் உயரம் தாண்டுதல் மற்றும் தடகளம் ஆகிய பிரிவுகளில் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவர்களை பள்ளியின் தாளாளர் காஜா மெயினுதீன், தலைமையாசிரியர் சுரேஷ்பாபு, உதவி தலைமை ஆசிரியர்கள் முகம்மது சுகைப், அஜிஸ் கனி மற்றும் ஜமாத்தார்கள், ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.