சென்னை, வேளச்சேரியில் செளத் இந்தியா என்ற பெயரில் ஷாப்பிங் மால் தனது பிரம்மாண்டமான புதிய கிளையை திறந்து உள்ளது.
சென்னை, வேளச்சேரியில் செளத் இந்தியா என்ற பெயரில் ஷாப்பிங் மால் தனது பிரம்மாண்டமான புதிய கிளையை திறந்து உள்ளது. சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் மெயின் ரோட்டில் செளத் இந்தியா மால் திறந்து தென்னிந்தியாவின் சில்லறை வணிக சந்தையில் உற்சாகம் நிறைந்த வேளச்சேரி பகுதியில் புதுமையான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் ஒரே இடத்தில் அனைத்து பிரத்தியேக ஆடை தொகுப்புகள் பாரம்பரிய பட்டு புடவைகள் பண்டிகை கால ஆடைகள், குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்ற சமகாலத்திய நவீன பேஷன் ஆடைகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறைந்த விலையில் அதிக கலெக்ஷன்களை அப்பகுதி பொதுமக்கள் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் புதிய ஷோரூமை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இவ் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பொட்டி வெங்கடேஸ்வர்லு தலைவர் மற்றும் இயக்குனர், நிர்வாக இயக்குநர்கள் சீர்னா ராஜமௌலி, திருவீதுலா பிரசாத ராவ் இவர்கள் வரவேற்று சிறப்பித்தனர்