சேலத்தில் ஸ்ரீ பச்சையம்மன் அறக்கட்டளை, ரேவதி மெடிக்கல் சென்டர், பாவை கண் மற்றும் தோல் மருத்துவமனை இணைந்து வழங்கும் கண் மற்றும் இருதய பொது மருத்துவ இலவச மருத்துவ முகாம்
சேலத்தில் ஸ்ரீ பச்சையம்மன் அறக்கட்டளை, ரேவதி மெடிக்கல் சென்டர், பாவை கண் மற்றும் தோல் மருத்துவமனை இணைந்து வழங்கும் கண் மற்றும் இருதய பொது மருத்துவ இலவச மருத்துவ முகாம்.
சேலம் அக்: கோரிமேட்டில் ஸ்ரீ பச்சையம்மன் அறக்கட்டளை, ரேவதி மெடிக்கல் சென்டர், பாவை கண் மற்றும் தோல் மருத்துவனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் இணைந்து மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் கண் மற்றும் இருதய பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. இம்முகாமினை, பாமக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி முகாமினை தொடங்கி வைத்தார். இம்முகாமில், அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில், பாமக மாநகர் மாவட்ட செயலாளர் சரவண கந்தன், மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.