Loading...

சைதாப்பேட்டையில் 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்குச் சமுதாய வளைகாப்பு

A

Admin

September 30, 2026 • 02:44 PM

சைதாப்பேட்டையில் 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்குச் சமுதாய வளைகாப்பு

சைதாப்பேட்டையில் 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்குச் சமுதாய வளைகாப்பு

சென்னை அக்:1


தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் (திட்டம் 10, சைதாப்பேட்டை) சார்பில், சைதாப்பேட்டை வரசித்தி விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில் 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்குச் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது

தாய்மார்களுக்கு வளையல் அணிவித்து, சந்தனம்-குங்குமம் இட்டு நலங்கு வைத்து, புடவை, மாலை, தாம்பூலம் மற்றும் பழங்கள் அடங்கிய மங்களகரமான சீர்வரிசைத் தட்டுகள் வழங்கப்பட்டன மேலும், தாய்மார்களுக்கு ஐந்து வகை கலவை சாதத்துடன் கூடிய அறுசுவை மதிய விருந்தும் உபசரிக்கப்பட்டன

கரு உருவான நாள் முதல் குழந்தையின் 1,000 நாட்கள் வரையிலான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப் பராமரிப்பே ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தின் அடித்தளம்! தாய் மற்றும் சேயின் நலன் காப்பதே எமது அரசின் முதன்மை நோக்கம்!

- Advertisement -