Loading...

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

A

Admin

September 20, 2026 • 03:38 AM

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

கலெக்டர் ரேவதி வேண்டுகோள்


தஞ்சாவூர் செப்டம்பர் 19

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் ரேவதி வேண்டுகோள் விடுத்துள் ளார்

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி விடுத்துள்ள செய்தி குறிப் பில் கூறியிருப்பதாவது:

    டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் எனும் கொசு பகலில் கடிப்பதால் பரவு கிறது .இந்த காய்ச்சல் பாதிப்பி னால் திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி ,உடம்பு வலி, மூட்டு வலி, தோலில் தடிப்பு அல்லது சிவப்பு புள்ளிகள், வாந்தி ,வயிற்று வலி ஆகிய அறிகுறிகள் ஏற்படும் அறிகுறிகள் கண்டவுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் ஆலோசனை பெற்ற ரத்த பரிசோதனை செய்து சிகிச் சை மேற்கொள்ள வேண்டும். மேலு ம் டெங்கு கொசுவின் உற்பத்தியை தடுக்கும் பொருட்டு தேவையற்ற பொருள்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

    வாரம் ஒரு முறை தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். வீட்டில் வைத்திருக்கும் எல்லா நீர் சேமிப்பு பாத்திரங்களை யும் கொசு போக வண்ணம் மூடி வைத்திருக்க வேண்டும். ஒவ்வொ ரு வீட்டிலும் கொசு கடிக்காத வண் ணம் இரவில் கொசு வலை மற்றும் பகல் நேரங்களில் முழுகை சட்டை பேண்ட், அணிதல் வேண்டும். குழந்தைகள் பகலில் தூங்கும் போது கொசுவலை பயன்படுத்த வேண்டும் .கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் நீர் வைத் திருக்கும் கலங்களில் தொடர்ந்து தண்ணீர் சேமித்து வைக்காமல் மூன்று நாளுக்கு ஒருமுறை மாற்றி வைத்தல் வேண்டும். டெங்கு ஒருவ ரிடம் இருந்து இன்னொருவருக்கு நேரடியாக பரவாது .கொசு கடித்தா ல் மட்டும்தான் பரவும். ஆகவே வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவுகளில் திரைச்சீலைகள் மூலம் வீட்டில் கொசு உள்ளே வருவதை தடுத்திப வேண்டும். வீட்டைச் சுற்றி உள்ள செடிகள், புதர்கள் அகற்றி வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மை யாக வைத்துக் கொள்ள வேண்டும்

    சுகாதார பணியாளர்கள் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் தங்கள் வீட்டிற்கு வரும் பொழுது முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் .வீட்டில் யாரேனும் காய்ச்சல் பாதிப்பு அடைந்தால் உடனே அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப அரசு சுகாதார நிலையம் மருத்துவரை அணுகி ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுதல் வேண்டும் ..இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

- Advertisement -