தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் ஹாக்கி மைதானத்தை சுற்றி 12 அடி உயர தடுப்பு கம்பியுடன் இரும்பு வேலி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் செலவில் தடுப்பு வேலைகள் எம்பி ஆய்வு
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் ஹாக்கி மைதானத்தை சுற்றி 12 அடி உயர தடுப்பு கம்பியுடன் இரும்பு வேலி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் செலவில் தடுப்பு வேலைகள்
எம்பி ஆய்வு
தஞ்சாவூர் அக்டோபர் 2
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் ஆக்கி விளையாட்டு மைதானத்தை சுற்றி ரூபாய் 30 லட்சத்தில் இரும்பு கம்பிகளுடன் தடுப்பு வேலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை முரசொலி எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் கால்பந்து, கபடி ,கைப்பந்து ,ஆக்கி, கூடைப் பந்து, டென்னிஸ், நீச்சல் குளம், ஸ்கேட்டிங், தடகளம் மைதானங்கள் உள்ளன .இது தவிர நவீன உள் விளையாட்டு அரங்கமும், செயல் பட்டு வருகிறது .ஆக்கி விளையாட் டு அரங்கத்தை சுற்றிலும் பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் .அப்போது ஆக்கிப் பந்துகள் தவறி நடைபயிற்சி மேற்கொள்வோர்கள் மீது பட்டு காயம் ஏற்படும் நிலைமை இருந்தது. இதனை தடுக்கும் வகையில் ஆக்கி விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை யடுத்து தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் செலவில் விளை யாட்டு அரங்கத்தை சுற்றி தடுப்பு வேலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி 200 அடி அகலமும், 400 அடி நீளம் என மொத்தம் 1200 அடி கொண்ட இந்த விளையாட்டு மைதானத்தை சுற்றிலும், தடுப்பு கம்பிகளுடன் இரும்பு வேலி 12 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது இந்த மைதானத்தில் 2 இடங்களில் வாயில்கள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. ஒரு இடத்தில் படிக்கட்டுகளுடன் கூடிய நுழைவு பாதையும், மற்றொரு இடத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் செல்லும் வகையில் பாதை அமைக் கப்பட்டு வருகிறது.
தற்போது பணிகள் நிறைவடை யும் தருவாயில் உள்ள நிலையில் அதனை முரசொலி எம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விளையாட்டு வீரர்களு க்கான உடைமாற்றும் அறை ஆண் பெண்களுக்கு தனித்தனி கழிவ றைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.
இதுகுறித்து முரசொலி எம்.பி கூறுகையில்;
அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் ரூபாய் 30 லட்சம் செல வில் ஆக்கி மைதானத்தை சுற்றி தடுப்பு வேலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களின் வசதிக் காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உடைமாற்றும் அறை மற்றும் கழிப்பறை வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்பட உள்ளது .மேலும் ஆக்கிய விளையாட்டு அரங்கத்தை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள் பவர்களுக்காக மண் தரையினால் ஆன வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது
அதற்கான நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார். ஆய்வின் போது முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், பயிற்சியாளர்கள் ரஞ்சித், மதுகுப்தா மற்றும் பலர் உடன் இருந்தனர்