Loading...

தஞ்சாவூர் பெரிய கோயில் வளாக த்தில் தூய்மை பணி 5 டன் குப்பைகள் சேகரிப்பு

A

Admin

September 30, 2026 • 02:42 PM

தஞ்சாவூர் பெரிய கோயில் வளாக த்தில் தூய்மை பணி 5 டன் குப்பைகள் சேகரிப்பு

தஞ்சாவூர் பெரிய கோயில் வளாக த்தில் தூய்மை பணி 5 டன் குப்பைகள் சேகரிப்பு

கலெக்டர் ரேவதி கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்து குப்பைகளை சேகரித்தார்

தஞ்சாவூர் அக்டோபர் 1
தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடந்த தூய்மை பணியை மாவட்ட கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்து,குப்பைகளை சேகரித்தார்
இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை திருச்சி மண்டலம் சார்பில் "தூய்மையேசேவை" என்ற தலைப்பில் தஞ்சையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது
அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை சார்பில் தூய்மை பணி நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு தொல்லியல் துறை திருச்சி மண்ட ல கண்காணிப்பாளர் அறவழி தலைமை தாங்கினார். தொல்லியல் துறை இன்ஜினி யர்கள் உமேஷ், சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்
முதுநிலை பராமரிப்பு உதவி யாளர் சோபிதா அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் ரேவதி கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்து, குப்பைகளை சேகரித்தார். தொடர் ந்து பெரிய கோவில் வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அங்குள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து பெரிய கோவில் உள்வளாகத்தில் தேங்கியுள்ள குப் பைகள் அள்ளப்பட்டு, தூய்மைப்படு த்தப்பட்டது .இதில் சுமார் 5 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன
நிகழ்ச்சியில் மூத்த தோட்டக்
கலை உதவியாளர் பாலசிங்கம், அரண்மனை தேவஸ்தான தலை மை எழுத்தர் செந்தில், உள்பட தொல்லியல் துறை ஊழியர்கள், அரண்மனை தேவஸ்தான ஊழி
யர்கள், என்.சி.சி .மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -