தஞ்சாவூர் மாவட்டம், மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியவளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ரேவதி ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம், மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியவளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ரேவதி ஆய்வு
தஞ்சாவூர் அக்டோபர் 5
தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ரோவதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ரேவதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி தஞ்சாவூர் மேலவீதி அய்யன் குளத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் குளம் சீரமைத்தல், நடைபாதை, குழந்தை கள் விளையாட்டு பூங்கா அமைத் தல் பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சமுத்திரம் ஏரியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது தொடர் பாக ஏரியை பார்வையிட்டு ஏரிக் கரையில் குப்பைகள் கொட்டப்படு வதை தடுத்து ஏரியை தூர்வாரி பாதுகாக்கவும்,அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர் .மேலும் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய விளார் அருகில் இயந்திரங்கள் மூலம் நடைபெற்று வரும் வடிகால் தூர் வாரும் பணி களை நேரில் பார்வையிட்டு, மழை நீர் தடையின்றி செல்லும் வகையி ல் பாதையில் தூர்வாரும் பணி களை பருவ மழை தொடங்குவதற் கு முன்பாக விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்
முன்னதாக மாநகராட்சி ராஜீவ் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் தூய்மை தஞ்சை, பசுமை தஞ்சை, என்னும் நகர்புறத்தை பசுமையா க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் நிகழ்வில் பங்கேற்று மரக் கன்று நட்டு வைத்தார்.
இந்த ஆய்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.