Loading...

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

A

Admin

September 29, 2026 • 03:01 PM

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
அமைச்சர் வினோத்ர வி தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர் செப்டம்பர் 30
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அமைச்சர் வினோத் ரவி தொடங்கி வைத்தார்
தமிழகம் முழுவதும் அரசு மருத்து வமனையில் பிறந்த குழந்தைகளு க்கு தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் மதுரையில் முதல்- அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அதன்படி கும்பகோணம் நிகழ்ச்சிகள் அமைச்சர் வினோத் ரவி கலந்துகொண்டு, பிறந்த குழந் தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமை தாங்கி னார் .மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி, மாவட்ட இணை இயக்குனர் முருகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
பின்னர் அமைச்சர் வினோத் ரவி கூறுகையில்
இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் நேற்று வரை தஞ்சாவூர் மாவட்டத் தில் கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் 1,037 குழந்தைகளும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவம னையில் 788 குழந்தைகளும், தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் 1487 குழந்தை களும் என மொத்தம் 3,312 குழந்தை களுக்கு மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன
இன்று முதல் அரசு மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தைகளு க்கு அவர்கள் வீடு திரும்பும் போது அந்தந்த மருத்துவமனையில் தங்க மோதிரங்கள் வழங்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவ மனை கண்காணிப்பாளர் கமரூல் ஜமால் ,நிலைய அலுவலர் மொய் தீன் அப்துல் காதர், கும்பகோணம் உதவி கலெக்டர் திருமலை, தாசில் தார் பாக்கியராஜ் மற்றும் டாக்டர் கள் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்

- Advertisement -