Loading...

தமிழக விவசாயிகள் சங்கம் கிளை சங்கம் தொடக்க விழா

A

Admin

October 08, 2026 • 05:26 PM

தமிழக விவசாயிகள் சங்கம் கிளை சங்கம் தொடக்க விழா

தமிழக விவசாயிகள் சங்கம் கிளை சங்கம் தொடக்க விழா 


கிருஷ்ணகிரி அக் :8


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்அடுத்த மத்தூர் அருகே உள்ள மூக்காகவுண்டனூர் நான்கு ரோடு பை-பாஸ் பகுதியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மூக்காகவுண்டனூர் கிளை சங்கம் தொடக்க விழாவும், அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் மிகச் சிறப்பாகவும் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு மூக்காகவுண்டனூர் கிளை தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கிளை கெளரவத்தலைவர் முனுசாமிகவுண்டர், கிளை துணைத் தலைவர் சக்திவேல், கிளை செயலாளர் பூவேந்தன், கிளை துணைச் செயலாளர் சிற்றாசு மற்றும் கிளை பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் சின்னசாமி M.A., அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சங்கக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

.

- Advertisement -