Loading...

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கணினி பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்

A

Admin

October 07, 2026 • 01:30 PM

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கணினி பணியாளர்கள்  தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கணினி பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்.


சென்னை, அக் - 08,


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கணினி பணியாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோயம்பேடு தமிழ்நாடு வாணிப கழக தலைமை அலுவலகம் முன்பு தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.


டி.என்.டி.யூ.சி பொதுச்செயலாளாரும் கணினி பணியாளர்கள் சங்க ஆலோசகருமான கா.இளவரி முன்னிலையிலும் கணினி பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கணினி பணியாளர்கள் சங்க ஆலோசகர் கா.இளவரி இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல அலுவலகங்களில் அவுட்சோர்சிங் முறையில் கடந்த 17 ஆண்டுகளாக கணினி இயக்குபவர்கள் மற்றும் கணினி பணியாளர்களுக்கு நிர்ணயித்த திருத்திய ஊதிய அமைப்பு 1.04.2025 முதல் நடைமுறைக்கு வந்த பின்னரும் அதன்படி ஊதிய உயர்வு வழங்குவதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரண்டு ஒப்பந்த நிறுவனங்களையும் நீக்கிவிட்டு, நிர்வாகம் நேரடியாக சம்பளம் வழங்கி, பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். மாத விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மருத்துவம் மற்றும் சமூக நலப் பயன்கள் கிடைப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் . பி.எஃப் பிடித்தம் செய்வதில் பணியாளர் சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் நிர்வாகம் பணியாளர்கள் கணக்கில் உள்ளதை நிர்வாகம் 6சதவீதம் பி.எஃப் தருவாதாக கணக்கு காட்டுவது ஏமாற்றுவேலை. நிர்வாகத்தின் 12 சதவீதமும் பணியாளரின் 12 சதவீதமும் சேர்த்து 24 சதவீதம் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

- Advertisement -