Loading...

தருமபுரியில்  பொது மக்களிடம்  வீடு வீடாக சென்று குப்பை சேகரிப்பு செய்து வரும் தூய்மை பணியாளர்கள்

A

Admin

September 26, 2026 • 12:50 PM

தருமபுரியில் 

பொது மக்களிடம் 

வீடு வீடாக சென்று குப்பை சேகரிப்பு செய்து வரும் தூய்மை பணியாளர்கள்


தருமபுரி செப் 27

தருமபுரி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வாடுகளிலும் பொது மக்களால் கொட்டப்படும் குப்பைகளை முறையாக வீடு வீடாக சென்று சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனை தவிர்த்து ஒரு சில இடங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குப்பைகளை ரோட்டில் கொட்டி செல்கின்றனர். அந்த இடங்களை கண்டறிந்து அதனை அழகுப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தர்மபுரி நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை வழங்குமாறு ஆணையாளர் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இதுவரை 14 இடங்களில் பொதுமக்களால் குப்பை கொட்டும் இடங்களில் பூச்செடிகள் வைத்து அழகு படுத்தி வருகின்றனர்.

- Advertisement -