தருமபுரி தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
தருமபுரி செப் 27
தருமபுரி
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாரண்டஅள்ளி பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலர்(பொ) செந்தில்குமார் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் அடங்கிய குழுவினர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.