தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் செப்டம்பர் 30
தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்
தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி தஞ்சாவூர் தெற்கு வடக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சுதா எம்பி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் குமரன், மகேந்திரன், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ண சாமி வாண்டையார், பி ஜி ராஜேந் திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் வாக்காளர் சிறப்பு திருத் தமான எஸ் ஐ ஆ ரில் பல்வேறு குளறுபடிகளை செய்த தலைமை தேர்தல் ஆணையரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரை கைது செய்து அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எஸ் ஐ ஆர் மேற்கொள் ளப்பட்ட மாநிலங்களின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர் களை மீண்டும் உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் ,என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத் தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் கும்பகோணம் மேயர் சரவணன், தெற்கு மாவட்ட காங்கிர ஸ் துணைத் தலைவர் வக்கீல் அன்பரசன், நிர்வாகிகள் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், வயலூர் ராமநாதன், சுரேஷ் கிருஷ்ணசாமி வல்லவராயன், ராஜ்மோகன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்