Loading...

திண்டுக்கல்லில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் வருகின்ற ஜனவரி 28 டாக்டர் பழனி பாபா நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

A

Admin

October 16, 2026 • 11:32 AM

திண்டுக்கல்லில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் வருகின்ற ஜனவரி 28 டாக்டர் பழனி பாபா நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

திண்டுக்கல்லில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் வருகின்ற ஜனவரி 28 டாக்டர் பழனி பாபா நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.



திண்டுக்கல்லில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் வருகின்ற ஜனவரி 28 டாக்டர் பழனி பாபா நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள வாழ்க வளமுடன் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இந்திய தேசிய லீக் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் பி.ஷேக் பரீத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இந்திய தேசிய லீக் கட்சி பொதுச்செயலாளர் மல்லிப்பட்டணம் இம்ரான், மாநில துணை தலைவர்கள் தென்காசி சுலைமான் சேட், கம்பம் சாதிக், தலைமை நிலைய செயலாளர் பல்லாவரம் இம்ரான், அகில இந்திய பழனிபாபா பாசறை ஒருங்கிணைப்பாளர் பாபா மைதீன், மாநில செயலாளர்கள் அப்துல் ரஹீம், பைரோஸ் பாபா, 

வணிகர் அணி மாநில தலைவர் ஈரோடு நிஜாம், வழக்கறிஞர் அணி மாநில தலைவர் இர்பான் பாஷா, 

தகவல் தொழில்நுட்ப அணி மாநில தலைவர் பைரோஸ் முஜாஹித் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் போது வழக்கறிஞர் அணி மாநில தலைவராக இர்பான் பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில தலைவராக பைரோஸ் முஜாஹித்,இளைஞரணி மாநில துணை செயலாளராக சுஹைல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் போது 

தீர்மானங்களான:ஜனவரி 28 பழனி ஆயக்குடியில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது என்றும்,

ஜனவரி 28 மாலை திண்டுக்கல் பேகம்பூரில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும்,டாக்டர் பழனி பாபா அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசை வலியுறுத்துவது என்றும்,

மண்டலம் வாரியாக மாவட்டத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என்றும்,

முகநூல் பதிவை பகிர்ந்தார் என்ற காரணத்திற்காக மாநில துணைப் பொதுச் செயலாளர் பல்லாவரம் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் கைதை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.மேலப்பாளையத்தை தொடர்ந்து முத்துப்பேட்டை மற்றும் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய இளைஞர்களை குறி வைத்து கைரேகை, கண்ரேகை புகைப்படங்கள் சட்டத்திற்கு விரோதமாக பதிவு செய்வதை வன்மையாக கண்டிப்தோடு, இந்த செயலை நிறுத்த வேண்டும் என இந்த கூட்டம் கேட்டு கொள்கிறது ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தின் முடிவில் நகரச் செயலாளர் ஜலாலுதீன் நன்றி கூறினார்.

- Advertisement -