திண்டுக்கல் மாவட்டம் “200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்”-ன்கீழ், பயன்பெற்று வரும் பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்
வெற்றி கதை.
திண்டுக்கல் மாவட்டம் “200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்”-ன்கீழ், பயன்பெற்று வரும் பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் ஆக்கப்பூர்வமான பல்வேறு மக்கள் நல திட்டங்களை தமிழகத்தில் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், சிறு, குறு, நடுத்தர விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ”விவசாயக் கடன் தள்ளுபடி” திட்டம், பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ”சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை" திட்டம், தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு, இதுபோன்ற பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 10.05.2026-அன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்ற கோப்புகளில் கையொப்பமிட்டார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில்கொண்டு, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டமானது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 200 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வரும் 4,45,600 நுகர்வோர்கள் மற்றும் 201 யூனிட் முதல் 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வரும் 2,07,336 நுகர்வோர்கள் என மொத்தம் 6,52,936 நுகர்வோர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தில் பயனடைந்த பயனாளி சுப்பிரமணி அவர்கள் தெரிவித்ததாவது எனது பெயர் சுப்பிரமணி நான் திண்டுக்கல் முருகபாவனத்தில் வசித்து வருகிறேன். எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பமாகும். நாங்கள் ஏற்கனவே மின்சாரம் பயன்பாடு குறைந்த அளவில் தான் பயன்படுத்தி வந்தோம். இருந்தாலும், மின் கட்டணம் செலுத்த சிரமப்பட்டு வந்தோம். இந்நிலையில், தமிழ்நாடு அரசு 500 யூனிட்டிற்குள் உள்ள நுகர்வோருக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தது. அதனால் தற்போது, எங்களுக்கு மின்கட்டணமே வருவதில்லை. இதன் மூலம் மிச்சமாகும் பணத்தை வீட்டின் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம். இத்திட்டத்தின் பயனாளிகளில் ஒருவராக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சுப்பிரமணி தெரிவித்தார். 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தில் பயனடைந்த பயனாளி நாகம்மாள் தெரிவித்ததாவது எனது பெயர் நாகம்மாள். நான் பாப்பான்குளத்தில் வசித்து வருகிறேன். எனக்கு இரு மகன்கள் உள்ளனர். நான் இப்பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றேன். நான் விவசாய வேலை செய்து வருகின்றேன். எங்களுடைய குடும்ப வருமானத்தை கொண்டு, எனது இரண்டு மகன்களுடைய கல்வி செலவினையும், குடும்பத்தின் அத்தியாவசியச் செலவுகளையும் சமாளிப்பதற்கே மிகவும் சிரமமாக இருந்தது. முன்னதாக, வீட்டு மின்கட்டணம் கட்டுவது கூடுதல் சுமையாக எங்களுக்கு இருந்து வந்தது. இந்த நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் 10.05.2026 முதல் வீட்டு உபயோக மின் நுகர்வு 500 யூனிட்டிற்குள் உள்ள நுகர்வோருக்கு 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்கள். இத்திட்டத்தின் கீழ் எங்களுக்கு மின் கட்டண அளவு குறைவாகவே வருகிறது. அதில் சேமிக்கும் பணத்தை இதர தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். என்னை போன்று பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில், தொலைநோக்கு சிந்தனைகளுடன் இத்திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நாகம்மாள் தெரிவித்தார்.