திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம்,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம்,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை மாவட்ட தலைவர்
Ln. S. நஜிர்சேட் தலைமையில் கொடுக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர்
Ln. S.கருணாகரன்,
மாவட்ட பொருளாளர்
K. விஜய்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கோரிக்கை மனுவில்
திண்டுக்கல் மாநகரில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் டட்லி ஸ்கூல் சர்ச் முதல் மெயின்ரோடு வரை வியாபாரிகளின் கடைகளின் முன்பு கடையை மறித்து நடைபாதை கடை போடுகின்றார்கள். அவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடங்களை ஒதுக்கீடு செய்து நடைபாதை கடை வியாபாரிகளுக்கும் உதவிட வேண்டும். வரி செலுத்தும் வியாபாரிகளையும் பாதுகாக்க வேண்டும்.
திண்டுக்கல் மாநகர் பகுதியில் வாகனம் நிறுத்தும் இடம் ஒதுக்கீடு அவசியம். வெளியூர் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த முடியவில்லை. மாலை நேரங்களில் காந்திமார்க்கெட் முகப்பு ரோட்டில் கார்கள், இருசக்கர வாகனங்கள் கட்டணத்துடன் நிறுத்திட வசதி ஏற்படுத்த வேண்டும்.
தீபாவளி பண்டிகை நேரங்களில் ரோடு பகுதியை மறித்து வியாபாரிகளின் கடையின் பாதையை மறித்து நடைபாதை கடைகள் போடுவதை தடுக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநகர் பகுதிகளில் ஆட்டோக்கள் நிறுத்திட இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி மாநகர் பகுதி ரோடுகளில் வாகனங்களில் ஸ்பீக்கர் பொருத்தி சத்தம் வருவதை தடுக்க வேண்டும்.
கல்யாண மண்டபங்களை வாடகைக்கு பிடித்து ExPo என்ற பெயரில் துணிக்கடைகள் போடுகின்றார்கள். ஸ்பீக்கர்களை வைத்து ரோடு பகுதி வரை இடையூறு ஏற்படுத்துகின்றனர். வெளியூரில் இருந்து வருகை தந்து வணிகம் செய்து, உள்ளூர் வியாபாரிகள் பாதிப்பு அடைகின்றனர்.
(மண்டபங்களில் கடைபோட ஏற்கனவே நீதிமன்ற தடை ஆணை பெற்று உள்ளோம்)
தீபாவளி வருவதால் மாநகர் பகுதிகளில் தற்போதே ரோடு மறித்து இடம் பிடிக்கும் பணி தொடங்கிவிட்டது. இதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனர். மேலும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ,திண்டுக்கல்
காவல்துறை துணை கண்காணிப்பாளர்,
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.