Loading...

திருவண்ணாமலையில்  பாஜக சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

A

Admin

October 17, 2026 • 02:47 AM

திருவண்ணாமலையில்  பாஜக சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலையில் 

பாஜக சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


திருவண்ணாமலை அக்.17-


திருவண்ணாமலை-நாச்சிப்பட்டு அருணேசா கல்வி குழும வளாகத்தில் பாஜக தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பாரத பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் விழா, அவரது 25 ஆண்டு அரசியல் வெற்றிவிழா முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டி நடந்தது.

இந்த விழாவுக்கு பாஜக தெற்கு மாவட்ட தலைவர் கே.ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் டி.ஜெய்நாத், கவிதாபிரதீஷ், இளைஞரணி மாநில துணை தலைவர் பாக்சர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி மாவட்ட தலைவர் பி.நவீன்குமார் அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்த கொண்ட பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ்.டி.சூரியா ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

இதில் கல்வி குழுமத்தின் தலைவரும் ஆர்.எஸ்.எஸ். மாநகர தலைவருமான எஸ்.பி.முத்துகுமரன்,பாஜக வேலூர் கோட்ட பொறுப்பாளர் எஸ்.குணசேகரன், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் டி.அறவாழி, மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் விஜய் பி.முத்துகுமார், துணை தலைவர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -