Loading...

தொழிற்சாலைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வேண்டுகோள்

A

Admin

September 25, 2026 • 12:57 PM

தொழிற்சாலைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வேண்டுகோள்

தஞ்சாவூர் செப்டம்பர் 26
தொழிற்சாலைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் கூறியுள்ளார்
தஞ்சாவூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்கு னர் (பொறுப்பு) புகழேந்தி விடுத்து ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது
டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலை களிலும் டெங்குவை தடுப்பதற் கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள் ளன .தொழிற்சாலைகளில் உள்ள டிரம்கள், தட்டுகள், டயர்கள் உள்ளிட்ட பொருள்கள் மற்றும் கொள்கலன்கள், தேங்கி நிற்கும் தண்ணீராக அகற்ற வேண்டும்
தண்ணீர் தொட்டிகளை இறுக்க மாக மூடி வைக்க வேண்டும். மேற்கூரை, வடிகால், கழிவுநீர் கால் வாய்கள் உள்ளிட்டவற்றை தவறா மல் சுத்தம் செய்ய வேண்டும். வளாகத்தை சுற்றி முறையாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் வாரம் தோறும் கொசு உற்பத்தி இடங்களை ஆய்வு செய்வதுடன், குறிப்பாக கட்டுமான பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் மட்டும் தோட்டங்களில் கவனம் செலுத்தி தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும்.
மழைநீர் தேங்கக் கூடிய காலி டப்பாக்கள், டயர்கள், பாட்டில்களை உடனடியாக அகற்ற வேண்டும். கொசுக்கடியில் இருந்து ஊழியர் களை பாதுகாக்கும் வகையில் கொசு விரட்டிகளை வழங்க வேண்டும் .ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் கொசுவலைகளை பயன்படுத்த வேண்டும். தொழிற் சாலைகளில் டெங்கு தடுப்பு குழு அமைக்கப்பட வேண்டும் அல்லது தொழில் சாரா சுகாதார பிரதிநிதி நியமிக்க வேண்டும். அதன் மூலம் ஆய்வு சரிபார்ப்பு பட்டியலை பராமரிக்க வேண்டும்.
கொசுக்கடியில் இருந்து பாதுகாப்பு ,விரைவான மருத்துவ கண்காணிப்பு குறித்து எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் புகைப்படங்களை தொழிற் சாலை யினர் என்ற idish.tnj@gmail.com இமெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -