நீலகிரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கூட்டம்*
*நீலகிரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கூட்டம்*
நீலகிரி செப் 19 நீலகிரி மாவட்டம் கூட்டுறவு ஒன்றியம் உறுப்பினர் கல்வித் திட்டம்
மைனலை மடித்தொரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களுக்கான உறுப்பினர் கல்வித் திட்டம் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக நடைபெற்றது. இந்த முகாமில் ஊர் தலைவர் சுந்தர் வரவேற்புரை வழங்கினார். மைனலை மடிதோரை கூட்டுறவு சங்க செயலாட்சியர் கூட்டுறவு சார்பதிவாளர் முனியசாமி முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்வில் கூட்டுறவு கடன் சங்கம் தொடர்பான திட்டங்களை விரிவான முறையில் எடுத்துரைத்து நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் கூட்டுறவு சார் பதிவாளர் ரா கௌரிசங்கர் உறுப்பினர் கல்வித் திட்டம் தொடர்பான விபரங்களை வழங்கினார். மைனலை கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், சேகரன் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர். நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் என்னென்ன கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. என நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ரவி சிறப்பாக எடுத்துரைத்தார் நிகழ்ச்சியின் இறுதியாக சங்கத்தின் செயலாளர் ரவி நன்றி உரை வழங்கினார் இந்த முகாமில் ஊர் பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.