நீலகிரி மாவட்டத்தில் அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம்!
ஊட்டி அக்டோபர்;25
நீலகிரி மாவட்டத்தில், கழகப் பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் உதகையில் ஏ.டி.சி. அருகிலுள்ள காந்தி திடலில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர் பாலநந்தகுமார் (B.A., B.L.) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எ.கே. செல்வராஜ், ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் புத்திசந்திரன், கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஆர். அர்ஜுணன், கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான கே.கே. மாதன், அ. மில்லர், முன்னாள் அமைச்சர் சிட்கோ சீனு, தலைமைக் கழகப் பேச்சாளர் எம். பழனியப்பன், கழக இளம் பேச்சாளர் உதகை சார்லி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
மேலும், மாணவர் அணியினர், மகளிர் அணியினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் நிறைவில், பெண்களுக்கு சேலைகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.