பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் தேவர் பேரவை இளைஞர் அணி மரியாதை ராமநாதபுரம்.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் தேவர் பேரவை இளைஞர் அணி மரியாதை ராமநாதபுரம். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் 63-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, தேவர் பேரவை இளைஞர் அணி நிறுவனத் தலைவர் இறகுசேரி சே. காசிராஜாதேவர் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் சந்தானகிருஷ்ண தேவர், மாநிலப் பொருளாளர் சுந்தரம், மாநில மாணவர் அணிச் செயலாளர் கவினிதி, மாநில வழக்கறிஞர் அணித் தலைவர் விஜய் மற்றும் அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, தேவகோட்டையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்ட காசிராஜாதேவர், காரைக்குடியில் உள்ள தேவர் சிலைக்கும், தொடர்ந்து மருது பாண்டியர்களின் நினைவு இடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் காரில் ஊர்வலமாக வந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசியத் தலைவரான முத்துராமலிங்கத்தேவரை குறுகிய வட்டத்திற்குள் கொண்டுவரக் கூடாது. தமிழக அரசு அவரது வாழ்க்கை வரலாற்றை அனைத்துப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கக் கோரி மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கையை எங்கள் இயக்கம் சார்பில் முழுமையாக வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்