பரமக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா
பரமக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா
ராமநாதபுரம் மாவட்டம்
பரமக்குடியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வில், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய கழகச் செயலாளருமான கே.கே. கதிரவன் கலந்து கொண்டு, தாய்மைப் பேற்றை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அன்புச் சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பரமக்குடி சார் ஆட்சியர் திருமதி வினோதினி பரமக்குடி நகர்மன்றத் தலைவர் சேது கருணாநிதி மற்றும் வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வினை வட்டார குழந்தைகள் நல அலுவலர் ஏற்பாடு செய்திருந்தார்.