Loading...

பாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த கோரிக்கை.

A

Admin

November 03, 2026 • 07:27 AM

பாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த கோரிக்கை.

பாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த கோரிக்கை. ராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி கமுதி அபிராமம் முதுகுளத்தூர் பகுதியில் வருகின்ற நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பேக்கரி கடைகளில் விற்பனை செய்யப்படும் இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்குவதுடன், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்குவதற்காக இனிப்பு மற்றும் கார வகைகளையும் அதிக அளவில் வாங்குவது வழக்கம். இதனால் சாயல்குடி கமுதி அபிராமம் முதுகுளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகள், இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் உணவுப் பயன்பாடு அதிகரிப்பதால், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வது அவசியமாகிறது. குறிப்பாக, பேக்கரி கடைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படும் இனிப்பு, கார வகைகள், கேக், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும், உணவுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் மூலப்பொருட்களின் தரம், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகள், உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் முறை, கடைகளின் சுகாதார நிலை ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, உணவுப் பொருட்களில் செயற்கை நிறமிகள் மற்றும் அனுமதிக்கப்படாத ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் நலன்கருதி, சாயல்குடி கமுதி அபிராமம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள அனைத்து பேக்கரி கடைகள் மற்றும் இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -