Loading...

புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறப்பு மதுரை

A

Admin

November 01, 2026 • 08:07 AM

புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறப்பு   மதுரை

புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறப்பு மதுரை நவ :1 மதுரை மாநகராட்சி அருள்தாஸ்புரத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம், 15வது மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி, மண்டலம்-2, அருள்தாஸ்புரத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம், 15வது மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.150 லட்சம் மதிப்பீட்டி புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் .நிர்மல்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் .நிஷாந்த் கிருஷ்ணா, மாண்புமிகு மேயர்(பொ) .நாகராஜன் , மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மதார் பதூருதின் (மதுரை மத்தியம்). தங்கபாண்டி (மதுரை மேற்கு) ஆகியோர் உடனிருந்தனர். புதியதாக திறக்கப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்கள் சிகிச்சைப்பிரிவு, ஆண்கள் சிகிச்சைப்பிரிவு, அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் காயக்கட்டுப்பிரிவு, பெண்கள், வெளிநோயாளிகளின் பிரிவு, ஆய்வகம், பரிசோதனை அறை, மகப்பேறு பராமரிப்பு மற்றும் ஸ்கேன் அறை, தொற்றுநோய் சிகிச்சைப்பிரிவு. தாய்ப்பால் ஊட்டும் அறை, வெளிநோயாளிகள் பதிவு அறை. ஊசி போடும் அறை. மருந்தகம், மருந்துகளுக்கான இருப்பு அறை, சலவைப் பணிக்கான அறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் வார்டு எண். 22 மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட உள்ளது. இந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 495.03 சதுர அடி ஆகும். எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் புதியதாக கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி, மருத்துவமனையை பார்வையிட்டதுடன், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

- Advertisement -