போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சர்வீஸ் சாலையை புதுப்பிக்க வேண்டும் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை . பரமக்குடி,செப்.26: பரமக்குடியில் புது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வியாபாரி சங்கம் கோரிக்கை
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சர்வீஸ் சாலையை புதுப்பிக்க வேண்டும்
வியாபாரிகள் சங்கம் கோரிக்கை .
பரமக்குடி,செப்.26: பரமக்குடியில் புது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள சர்வீஸ் சாலையை புதுப்பிக்க வேண்டும் என அமைச்சர் மதன்ராஜாவிடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர் .
ராமநாதபுரம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக குரு மற்றும் சிறு தொழில் துறை அமைச்சர் மதன்ராஜாவை பரமக்குடி வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக தலைவர் ராசிபோஸ் தலைமையில் சந்தித்தனர் .இப்போது ,
ராமநாதபுர மாவட்டத்திலேயே பரமக்குடி அதிகமாக 2 (இரண்டு லட்சம்) மக்கள் தொகை உள்ளது. மாவட்டத்தின் மைய பகுதியாக உள்ள பரமக்குடியின் பொது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆற்றின் தென்கரையில் அமைக்கப்பட்ட சர்வீஸ் ரோட்டை புதுப்பித்து தர தக்க நடவடிக்கை எடுத்து புது ரோடு அமைத்துத்தர வேண்டுகிறோம்.விபத்துக்களை குறைக்கும் வகையில் ஐந்து முனை சாலை மற்றும் பஸ்ஸ்டான்டு ரயில்வே ஸ்டேஷன் செல்லும் கார்னர் பகுதி, ஆர்ச் பகுதியில் தானியங்கி சிக்னல் லைட் அமைத்து விபத்துக்களை குறைத்து தர தக்க நடவடிக்கை தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அளித்தனர் .இந்த சந்திப்பின் போது செயலாளர் மணிவண்ணன் ,பொருளாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .
படம்
பரமக்குடி வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக அமைச்சர் மதன்ராஜாவிடம் வியாபாரிகள் சங்கம் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .