மதுரையில் அகில இந்திய நாய் கண்காட்சி நாட்டு நாய்கள், வெளிநாட்டு நாய்கள் என 300க்கும் மேல் பங்கேற்பு
மதுரையில் அகில இந்திய நாய் கண்காட்சி
நாட்டு நாய்கள், வெளிநாட்டு நாய்கள் என 300க்கும் மேல் பங்கேற்பு
மதுரை அக்.19
மதுரையில், இந்திய வகை நாய்களின் சிறப்பு கண்காட்சி மற்றும் கிரேட் டேன் வகை சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு நாய்களின் சாகச நிகழ்வை கண்டுரசித்தனர்
மதுரை கெனைன் கிளப் கடந்த 26 வருடங்களாக தொடர்ந்து மதுரையில் அகில இந்திய நாய் கண்காட்சியை நடத்தி வருகிறது.
இந்த சங்கமானது தி கென்னல் கிளப் ஆப் இந்தியாவின் அங்கீகாரம் பெற்று இச்சங்கத்தின் தலைமை புரவலராக இந்திய ஜனாதிபதி உள்ளார்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அகில இந்திய நாய் கண்காட்சி மதுரை விரகனூர், கோழிமேடு பகுதி தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இதில் இந்தியா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த நடுவர்கள் சர்வதேச நாய்களுக்கான நடுவர்களாக பொறுப்பேற்று சிறந்த 8 நாய்களை தேர்ந்தெடுத்தனர்.
மேலும், நாட்டு நாய்களுக்கான போட்டியில், சிறந்த நாட்டு நாயையும், சிறந்த நாட்டு நாய் குட்டியையும் தேர்ந்தெடுத்து அதனை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பரிசுக்கோப்பையும் வழங்கப்பட்டது.
மேலும் 12 முதல் 18 வயதிற்கான சிறந்த ஜீனியர் ஹாண்லர்க்கு சிறப்பு பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது
இந்த கண்காட்சியில் இந்தியா முழுவதும் இருந்து 350க்கு மேற்பட்ட 50 வகையான நாய்கள் பங்கேற்றன.
மேலும் நமது இந்திய நாட்டு இன நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கேரவான் ஹவுண்ட், கன்னி, கோம்பை மற்றும்
வெளிநாட்டு இனங்களான ஆப்கான் ஹவுண்ட், பாக்ஸர், டெரியர், ஜெர்மன் ஷெப்பர்ட், டோபர்மேன், கிரேட் டேன், ராட் வேலர், பக், செயின்ட் பெர்னார்டு போன்ற நாய்களும் பங்கு பெற்றன.
அத்துடன் ஜெய் கே.9 போர்ஸ் -ன் ஆர்மி சேவை நாய்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அகில இந்திய நாய் கண்காட்சியில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் வந்திருந்த நாய்களின் வகைகளையும், சாகச நிகழ்வையும் கண்டு ரசித்தனர்.