மதுரையைச் சேர்ந்த காதர் மஹிதீன் ராஜாவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் நஷ்ட ஈடாக ரூபாய் 28,512 வழங்க வாரியத் தலைவர் உத்தரவு
மதுரையைச் சேர்ந்த காதர் மஹிதீன் ராஜாவுக்கு
ஏர் இந்தியா நிறுவனம் நஷ்ட ஈடாக
ரூபாய் 28,512
வழங்க
வாரியத் தலைவர் உத்தரவு
மதுரை அக் 01
மதுரையைச் சேர்ந்த காதர் மஹிதீன் ராஜா என்பவர் கடந்த 2020 ஆண்டில் சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ஏர் இந்தியா விமானத்தில் தனது குடும்பத்தினர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு விமான டிக்கெட் ரூபாய் 13 ஆயிரத்து 512 எடுத்திருந்தார். அப்போது கோவிட் 19 காரணமாக விமான ரத்து செய்யப்பட்டது.
மேலும்
இந்த நிலையில் அவரது டிக்கெட் பணத்தை திருப்பித் தரும்படி பல முறை கேட்டும் ஏர் இந்தியா நிறுவனம் தரவில்லை. எனவே இது தொடர்பாக மக்கள் குறைதீர் ஆணையத்தில் வழக்கறிஞர் சையது முகமது பாதுஷா என்பவர் மூலம் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் திரவிபெருமாள்
காதர் மஹிதீன் ராஜா சண்முகப்பிரியா ஆகியோருக்கு ஏர் இந்தியா நிறுவனம் நஷ்ட ஈடாக
ரூபாய் 28,512 உடனடியாக
வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.