மதுரை திருநகர் (எஸ் ஆர் வி நகர் )பாலாஜி நகர் ஆகிய பகுதியில் குண்டுங்குழியுமான சாலைகள் குடிநீர் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் அவதி
*மதுரை திருநகர் (எஸ் ஆர் வி நகர் )பாலாஜி நகர் ஆகிய பகுதியில் குண்டுங்குழியுமான சாலைகள் குடிநீர் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் அவதி*
*சேறும் சகதியுமான சாலைகளில் பாலாஜி நகர் பொதுமக்கள் நாற்று நடவு செய்து நூதன போராட்டம்*
திபகு அக் 25
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநகர் (எஸ்ஆர்வி நகர்) பகுதியில் உள்ள பாலாஜி நகரில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர் அதே போல்
திருநகர் பாலாஜி நகர் பகுதியில் எட்டு தெருக்களில் உள்ள
சுமார் 1800 க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 5000 க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக புதைகுழி போல் காட்சியளிக்கிறது மேலும் மழைக்காலங்களில் நீர் தேங்கி பொதுமக்கள் திருநகர் மற்றும் எஸ் ஆர் வி நகர் செல்ல பெரிதும் செரமுத்துக்குள்ளாகி இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
குண்டுங்குழியுமான சாலைகளால் இப்பகுதி மக்களுக்கு தேவையான வாகனங்களில் விற்பனையாகும் குடிநீர் சாலை வசதிகள் இல்லாமல் உள்ளே வர மறுக்கின்றனர்.மேலும் குடிநீர் வாகனம் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் பிரச்சனை ஏற்படுகிறது இதனால் குடிநீர் விற்பனையாளர்கள் இந்தப் பகுதிகளுக்கு வரமறுக்கின்றனர் இதனால் குடிநீர் கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது.
மேலும் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு இரு சக்கர வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாமல் சிக்கிக் கொள்வதால் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் பிரச்சனை ஏற்படுகிறது மீண்டும் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் சேரும் சகதிமான சாலைகளில் செல்வதில் சிக்கி கொள்கின்றனர் இதனால் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வெளியே எடுக்க முடியாமல் இப்பகுதி மக்கள் கடந்த நான்கு மாதங்களாக அவதிப்படுகின்றனர் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான நிர்மல் குமார் முதலமைச்சரின் தனிப்பிரிவு என அனைத்து பேருக்கும் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இப்பகுதி மக்கள் விரக்தியில் உள்ளனர்.
சட்டத்துறை மற்றும் மின்துறை அமைச்சருமானநிர்மல் குமார் தொகுதியான திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள திருநகர் பாலாஜி நகர் பகுதி மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் பகுதி மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.