மதுரை மண்ணில் 1911-ல் ஒரு பஸ்ஸில் தொடங்கிய கதை, ஒரு சாம்ராஜ்யமாக மாறியிருக்கிறது டி.வி.எஸ்.,ஸின் கதை.
மதுரை மண்ணில் 1911-ல் ஒரு பஸ்ஸில் தொடங்கிய கதை, ஒரு சாம்ராஜ்யமாக மாறியிருக்கிறது டி.வி.எஸ்.,ஸின் கதை.
மதுரை மண்ணில் 1911-ல் ஒரு பஸ்ஸில் தொடங்கிய கதை, இன்று 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சாம்ராஜ்யமாக மாறியிருக்கிறது. அதுதான் டி.வி.எஸ்.,சின் கதை.
இது வெறும் கம்பெனி வரலாறு அல்ல. ஒரு தமிழனின் விடாமுயற்சி, நேர்மை, தொலைநோக்கு பார்வையின் வாழ்க்கை வரலாறு.
திருக்குறுங்குடியில் பிறந்த ஒரு கனவுக்காரன்
டி.வி.எஸ்., ஐ உருவாக்கியவர் டி.வி. சுந்தரம் ஐயங்கார். 1877-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி திருக்குறுங்குடியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.
வழக்கறிஞராக படித்து முடித்தார், இந்தியன் ரயில்வேயில் வேலை பார்த்தார், பிறகு வங்கியில் வேலை பார்த்தார். ஆனால் அவருக்குள் இருந்த தொழில் கனவு அவரை சும்மா இருக்க விடவில்லை.
32 வயதில், தனது டிம்பர் வியாபாரத்தை விட்டுவிட்டு மதுரையில் ஒரு பஸ் சர்வீஸை தொடங்கினார். 1911-ல் டி.வி. சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். இது அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் முதல் பஸ் சர்வீஸ் என்ற பெருமையை பெற்றது, தென்னிந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட சாலை போக்குவரத்துக்கு அடித்தளம் அமைத்தது.
யோசித்து பாருங்கள். 1911-ல், கார்களே அபூர்வமாக இருந்த காலத்தில், ஒரு தமிழர் பஸ் சர்வீஸ் நடத்துவது என்பது எவ்வளவு பெரிய துணிச்சல்.
பஸ் சர்வீஸில் இருந்து பேரரசு வரை
அந்த ஒரு பஸ், சில ஆண்டுகளில் சதர்ன் ரோடுவேஸ் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான லாரிகள், பஸ்கள் கொண்ட மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாக வளர்ந்தது.
அடுத்து அவரது பார்வை உற்பத்தி துறை பக்கம் திரும்பியது:
1945-ல் சுந்தரம் மோட்டார்ஸ் உருவானது, 1962-ல் சுந்தரம் கிளேட்டன்நிறுவனம் இங்கிலாந்தின் கிளேட்டன டிவாண்ட்ரே ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டது. இதுதான் டி.வி.எஸ்.சின் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியின் தொடக்கம். 1976-ல் ஓசூர்-ல் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில் டி.வி.எஸ்., குடும்பம் ஒரு கொள்கையை உயிராக கடைபிடித்தது: நம்பிக்கை, தரம், வாடிக்கையாளர் சேவை. இன்றும் டி.வி.எஸ்., என்றால் நம்பிக்கை என்று மக்கள் சொல்வதற்கு காரணம் அதுதான். டி.வி.எஸ்.சின் கம்பெனியின் பிறப்பு: இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தருணங்கள்
1980 இந்தியாவின் முதல் இரண்டு பேர் அமரக்கூடிய மொபெட் டி.வி.எஸ்., 50 அறிமுகம். கிராமங்களில் இன்றும் ஓடும் அந்த வண்டியை மறக்க முடியுமா.
1982: ஜப்பானின் சுசிகி மோட்டார் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் கூட்டணி. டி.வி.எஸ்.சுசிகி உருவானது. இந்தியாவில் 100சி.சி., பைக்குகளின் யுகத்தை தொடங்கியது டி.வி.எஸ்., தான். 1984-ல் முதல் இந்தோ-ஜப்பானிய 100சி.சி., பைக்கை அறிமுகப்படுத்தியது.
1994: இந்தியாவின் முதல் சொந்த தயாரிப்பு ஸ்கூட்டர் டி.வி.எஸ்., ஸ்கூட்டி அறிமுகம். பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்ட இந்த வண்டி, இந்திய இருசக்கர வரலாற்றில் ஒரு புரட்சி.
2001சுசிகி உடனான கூட்டணி முடிவுக்கு வந்தது. டி.வி.எஸ்., தனி நிறுவனமாக, டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனியாக ஆக மாறியது. பலர் இதுநிறுவனம் டி.வி.எஸ்., என முடிவு என்று நினைத்தார்கள். ஆனால் நடந்தது வேறு.
2002தரத்திற்கான உலகின் மிக உயரிய விருதான டெமிங் பரிசு பெற்ற முதல் இந்திய இருசக்கர நிறுவனம் தான். ஜப்பானியர்களே வியந்த தரம்.
2007டி.வி.எஸ்., அப்பாச்சி பிறந்தது. இன்று அப்பாச்சி உலகம் முழுவதும் 70 லட்சம் வாடிக்கையாளர்களை தாண்டிவிட்டது. 20 ஆண்டுகளில் 7 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை என்ற மாபெரும் மைல் கல்லை எட்டியுள்ளது.
இன்று டி.வி.எஸ்., இந்தியாவின் 3-வது பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளர், 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
சென்னை-யை தலைமையிடமாக கொண்டு, நான்காம் தலைமுறை தலைவர்களால் நடத்தப்படும் இந்த நிறுவனம், 100 ஆண்டுகளை கடந்தும் குடும்ப மதிப்புகளை இழக்காத அபூர்வ பேரரசு.
1911-ல் மதுரையில் ஓடிய ஒரு பஸ்ஸில் இருந்த டிரைவரின் நேர்மையும், கண்டக்டரின் பணிவும் இன்றும் டி.வி.எஸ்., ஷோரூமில் இருக்கிறது என்பார்கள் பெரியவர்கள்.
இது ஒரு கம்பெனியின் வளர்ச்சி அல்ல. தமிழர்களால் முடியும் என்று உலகிற்கு சொன்ன ஒரு வாழ்க்கை பாடம்.