மத்திய அரசின் திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயன் அமைச்சர் ராம்தாஸ்
மத்திய அரசின் திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயன் அமைச்சர் ராம்தாஸ் அதவாலே மதுரை, நவ :1 மத்திய அரசு திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பலன் அடைந்துள்ளதாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறினார். மதுரையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. வி.பி. சிங் ஆட்சி காலத்தில் மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதற்கு உயர் மற்றும் உச்சநீதிமன்றத்தில் எந்தக் சவாலும் இல்லை. ஆனால் உச்ச நீதிமன்றம் இந்தியா முழுவதும் இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (10% இட ஒதுக்கீடு வழங்கும் மிக முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் அல்லாத, ஆனால் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய அனைத்து சமுதாய மக்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு பலனளிக்கிறது. எனது துறையின் கீழ் தாழ்த்தப்பட்டோர், ஓபிசி சமூகத்தினர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்றோர் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் உள்ளன. இந்த ஆண்டு எனது அமைச்சகத்தின் வரவு-செலவு திட்டம் ஏறக்குறைய ரூ.1,98,447 கோடி. இதில் எஸ்சி (SC) பிரிவினர் மேம்பாட்டுத் திட்டத்திற்காக மட்டும் ரூ.1,98,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல அமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர், 1952-ல் நடந்த முதல் தேர்தலில் அம்பேத்கர் மும்பையில் லோக்சாதி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரை காங்கிரஸ் கட்சி தோற்கடித்தது.பின்னர் 2வது முறையாக 1954-ல் நாக்பூர் அருகில் உள்ள பண்டாராவில் போட்டியிட்டார். அப்போதும் அவரை காங்கிரஸ் கட்சி தோற்கடித்தது. ஆனால் இன்று ராகுல் காந்தி இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்திச் செல்கிறார். இன்றைய தமிழக முதல்வருக்கு ஒருவேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகத்தில் தலித் சமூகத்தினர் மீதும், மற்ற சமூகத்தினர் மீதும் பல தாக்குதல்கள், வன்கொடுமைகள் நிகழ்கின்றன. இதனை தடுக்க வேண்டும். எங்களது கட்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் (OBC) ஆதரிக்கிறது. எதிர்காலத்தில் தலித் - ஓபிசி (OBC) சமூகத்தினருக்கு இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் நிலமில்லாத ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சி முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறது. கிராமங்களில் நிலம் இல்லாத குடும்பங்களுக்கு அரசு நிலத்தையோ அல்லது விலைக்கு வாங்கிய வழங்கி உதவ வேண்டும். கிராமங்கள் மற்றும் நகரங்களில் சேரி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு வீடுகள் வழங்கி வருகிறது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 4 கோடி மக்கள் வீடுகளை பெற்றுள்ளனர். தற்போது மேலும் 3 கோடி வீடுகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கிராமப் பகுதிகளில் 6 லட்சத்து 59,000 வீடுகளும், நகர்ப்புற பகுதிகளில் 6 லட்சத்து 35,000 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் ரூ.59 கோடியே 54 லட்சத்து 23,000 வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 10 கோடியே 62 லட்சத்து 3,000 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. முத்ரா யோஜனா திட்டத்தில் தமிழ்நாடு அமைச்சகத்தால் சிறு வணிகர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசுதான் இத்திட்டத்தை தொடங்கும் முடிவை எடுத்தது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, இதுவரை 60 கோடியே 53 லட்சத்து 97,000 பேர் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 6 கோடியே 46 லட்சத்து 32,000 பேர் இத்திட்டத்தில் வங்கி கடன் பெற்றுள்ளனர். பிரதமரின் உஜ்வாலா யோஜனா (சமையல் கியாஸ் சிலிண்டர் திட்டம்) மூலம் நாடு முழுவதும் சுமார் 10 கோடியே 57 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 32 லட்சத்து 2,000 கேஸ் இணைப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வழங்கும் திட்டம் அமலில்உள்ளது. இத்திட்டத்தில் சுமார் 60 கோடி பேர் பயனடைந்துள்ளனர். மத்திய அரசி் திட்டங்களை மக்களிடம் விளக்கவே இங்கு வந்துள்ளேன். ராகுல் காந்தி தில்லியில் நாளை போராட்டம் தொடங்குகிறார். தேர்தல் ஆணையம் மீது எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். 13 கோடி வாக்குகள் விடுபட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள். இதில், சுமார் 2.8 கோடி வாக்காளர்கள் உயிரிழந்துள்ளதால் அவர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. அது சரியே. மேலும் சுமார் 6.2 கோடி வாக்காளர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளதால் அவர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மேலும் 3 கோடி பேர் ஒருமுறை கூட வாக்காத நிலையில் விசாரணை அடிப்படையில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது சரியான நடவடிக்கையே. இவ்வாறு கூறினார்.