மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர்
மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர்
மதுரை அக் :17
மதுரை மாநகராட்சி, மண்டலம்-2, செல்லூர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளையும், அப்பகுதியில் உள்ள சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை சீரமைப்பு பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, ஆணையாளர் அவர்கள், செல்லூர் 60 அடி ரோடு பகுதியில் உள்ள பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டதுடன், முத்துராமலிங்க தேவர் 1வது தெரு. 2வது தெரு. மெயின்ரோடு மற்றும் அய்யனார் கோவில் எதிர்புறம் பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதிகளில் மழையின் காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டதுடன், அப்பகுதியில் உள்ள கால்வாய்களில் அடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்திடவும். மழைநீர் அகற்றுவதற்கு நீர் உறிஞ்சும் வாகனத்தை வரவழைத்து உடனடியாக மழைநீரை அப்புறப்படுத்த அலுவலவர்களுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் வாகனம் வரவழைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், அப்பகுதியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒவ்வொரு தெருவாக ஆய்வு மேற்கொண்டு மழைபெய்யும் பொழுது தெருக்களில் தேங்கும் மழைநீரை வாய்க்காலில் செல்வதற்கு ஏதுவாக தெருவோரங்களில் உள்ள கால்வாய்களை சீரமைத்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக மண்டலம்-2, சின்ன கண்மாய் தெரு. ஓ.சி.பி.எம் பள்ளி எதிர்புறம், நரிமேடு பிரசாத் ரோடு ஆகிய பகுதிகளில் சாலை ஓரத்தில் மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டதுடன் அவற்றை உடனடியாக வாய்க்கால்களில் வெளியேற்றிட உரிய பணிகளை மேற்கொள்ள அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, செல்லூர் பாலம் கீழ்புறம் உள்ள பூங்கா பராமரிப்பின்றி உள்ளதை பார்வையிட்டதுடன். அப்பூங்காவினை சுத்தப்படுத்திடவும், மேலும், அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் தங்கள் வீட்டில் வளர்க்கும் மாடுகளை அங்கு கட்டக்கூடாது என தெரிவித்திடவும், மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து மாடுகளை பிடித்து கால்நடை காப்பகத்தில் ஒப்படைத்து அப்பகுதியை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.