Loading...

வணிகவரித்துறை பணியாளர் பயிற்சி நிறுவனக் கட்டடத்தை தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

A

Admin

October 31, 2026 • 09:52 AM

வணிகவரித்துறை பணியாளர் பயிற்சி நிறுவனக் கட்டடத்தை  தமிழ்நாடு  எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்  நிர்மல் குமார் திறந்து வைத்து  குத்துவிளக்கேற்றி  பார்வையிட்டார்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தலைமையில் மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், வணிகவரித்துறை இணை ஆணையர் அலுவலக வளாகத்தில் ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு, கூடுதலாக முதல் தளம் கட்டப்பட்டுள்ள வணிகவரித்துறை பணியாளர் பயிற்சி நிறுவனக் கட்டடத்தை தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். இந்த நிகழ்வில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை, மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் . தங்கப்பாண்டி, மாநகராட்சி மேயர் (பொ) / துணை மேயர் நாகராஜன்,மாநகராட்சி ஆணையாளர்கௌரவ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் .அன்பழகன் , மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

- Advertisement -