Loading...

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ.582-ல் மானிய விலையில் நெல் பயிர் காப்பீட்டு விழிப்புணர்வு

A

Admin

October 17, 2026 • 03:30 AM

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ.582-ல் மானிய விலையில் நெல் பயிர் காப்பீட்டு விழிப்புணர்வு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ.582-ல் மானிய விலையில் நெல் பயிர் காப்பீட்டு விழிப்புணர்வு!



அக் 17



தேனி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் வரை இயல்பான மழையளவை விட குறைவாக மழை பெறப்பட்டுள்ளது.

 சாகுபடி பரப்பு நடப்பாண்டு நெல், சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய்வித்துப் பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.உரங்கள் மற்றும் விதைகள் இருப்பு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் (யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் கலப்பு உரங்கள்) இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மானியத் திட்டங்கள் குறைந்த அளவில் நீர் தேவைப்படும் மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்ய 1500 ஏக்கர் பரப்பிற்கு அரசிடமிருந்து ஆணை பெறப்பட்டுள்ளது.

 விவசாய அடையாள எண் விவசாயிகள் உரம் மற்றும் மானியத் திட்டங்களைத் தடையின்றிப் பெற, தங்களது நில ஆவணங்களுடன் வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விவசாய அடையாள எண்ணைப் பெற வேண்டும்.

 நலத்திட்ட உதவிகள் தோட்டக்கலைத்துறையின் சார்பில் திசு வாழைக்கன்றுகள் வழங்கப்பட்டதோடு, விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

- Advertisement -