Loading...

வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

A

Admin

October 17, 2026 • 11:11 AM

வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  விவசாயிகள் குறைதீர் கூட்டம்

வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 


வேதாரண்யம் அக் :18



நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேதாரண்யம் கோட்டாட்சியர் கண்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது .கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓஎஸ் மணியன் தமிழக கடைமடை விவசாய சங்க மாநில தலைவர் கமல் ராம் விவசாய சங்க நிர்வாகிகள் மோகன் குமார் சுப்பிரமணியன் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சரவணன், விவசாயிகள் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராது குறித்தும் மேலும் ஆறுகளில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றாதே குறித்தும் பொதுப்பணித்துறையினர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் விவசாயிகள் வேளாண்மை துறையினர் தோட்டக்கலை துறையினர் எங்களுக்கு எந்த விதமான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை எனவும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர் மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை வைத்து செவிடன் காதில் ஊதிய சங்கு போல் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்தனர்.


கடந்து ஆறாம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் மீது வட்டாட்சியர் பசுபதி அவர்கள் விவசாயிகளை அமர வைக்காமலும் அவதூறாக பேசியும் அவர்கள் மீதுவேதாரண்யம் காவல் நிலையத்தில் பொய் வழக்கு அளித்து காவல்துறையினர் மூன்று பேர் மீது வழக்கு பதிவு சம்பவத்தில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர் ஓஎஸ் மணியன் தெரிவிக்கையில் விவசாயிகளை வட்டாட்சியர் சந்தித்து குறைகளை கேட்டு அறிய வேண்டும் எனவும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் விவசாயிகளை அமர வைத்து அவர்களுடைய கோரிக்கையை கேட்க வேண்டும் வட்டாட்சியர்என் அரசியல் வாழ்க்கையில் 54 ஆண்டுகளில் இது போன்ற ஒரு வட்டாட்சியர் காவல் நிலையத்தில் விவசாயிகள் மீது புகார் அளித்த சம்பவம் இதுதான் முதல் முறை என தெரிவித்தார்.உடனடியாக விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கினை வாபஸ் பெற வேண்டும் எனவும் இது குறித்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசப்படும் எனவும் தெரிவித்தார்,

- Advertisement -