Loading...

ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா

A

Admin

October 17, 2026 • 11:14 AM

ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு  கல்வி உதவித் தொகை வழங்கும் விழா

ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு
கல்வி உதவித் தொகை வழங்கும் விழா


மதுரை, அக்.18


ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவன இணை நிர்வாக இயக்குனர் சுதர்சன் ஹோலா, துணை நிர்வாக இயக்குனர் முருகானந்த பாண்டியன், நிர்வாகத்தின் துணைத் தலைவரும், திருச்சி மண்டல வணிகத் தலைவருமான சரவணக்குமார் ஆகியோரால்
சுமார் 1,700 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.

- Advertisement -