*சமூக ஆர்வலரின் நூதன கோரிக்கயிணை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பணிகளை துவக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்*
*சமூக ஆர்வலரின் நூதன கோரிக்கயிணை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பணிகளை துவக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்*
திருப்புவனம் செப் 26
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
பனையநேந்தல் மற்றும் உலகநேந்தல் கண்மாய்களை தூர்வாரக் கோரி கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு மனுக்களை கொடுத்து வந்த சமூக ஆர்வலர் கோபால் கடந்த எட்டாம் தேதியன்று அன்று விவசாயிகளை கூட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் சங்கு ஊதும் போராட்டம் நடத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை தமிழன் குரல் நாளிதழ் செய்தியாக வெளியிட்டிருந்த நிலையில்
இதனை
அறிந்த மாவட்ட ஆட்சியர் முதற்கட்டமாக உலகநேந்தல் கண்மாய்க்கு நீர் வரத்து வரும் வாய்க்கால்களை சீரமைப்பு செய்து தர பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மற்றும் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் அப்பணியினை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர் மேலும் சமூக ஆர்வலரின் நீண்ட ஆண்டு கோரிக்கினை ஏற்று பணி செய்ய உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியருக்கும் அதிகாரிகளுக்கும் கண்மாய் நீர் பாசன விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.